
ஜனவரி 2010ல் சொந்த ஊரில் நாட்கள் சில அழகாக நகர்ந்தது. இருபக்கமும் வயல்வெளிகள் நிறைந்த தண்டவாளத்தில் நடந்து செல்வது ரம்மியமான அனுபவமாக இருந்தது. விலகாத பனி, சில்லென்று முகம் தொடும் குளிர்க்காற்று என அது ஆனந்த அனுபவம். தண்டவாளம் விட்டு இறங்கி ஈரமான வரப்பில் நடந்து செல்லும் போது... "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா" பாடலை என்னையும் அறியாமல் வாய் முணுமுணுத்தது. பிழைப்புக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ... சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் வசிப்பது என்பது ஒரு இரவல் வாழ்க்கை போலத்தான். கிணற்றில் துள்ளிக்குதிப்பது நீச்சல் அடித்துக் குளிப்பது குழந்தை போல குதுகலமான அனுபவம். உண்மையாக ஊரில் குளிக்கும்போது தான் உடம்பு முழுவதும் நனைகிறது என்ற திருப்தி மனசுக்குள் வருகிறது. தண்ணீருக்கு மூழ்கி சில நொடிகள் கழித்து வெளிவந்தால்... அப்பப்பா
No comments:
Post a Comment